Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

அரச வெசாக் விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்

அரச வெசாக் விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்

2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (10.05) நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் ஆரம்பிக்கப்பட்டது.

நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம் எனும் தொனிப்பெருளிள் நடைபெறும் இம்முறை அரச வெசாக் விழா, மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறும்.

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,பௌத்த அலுவல்கள் திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

மேலும், மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தி, அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப மக்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு பௌத்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது முடிக்கப்படாத விகாரைகளின் அபிவிருத்திப் பணிகளை முப்படைகளின் உதவியுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரச வெசாக் விழாவுடன் இணைந்து, மக்களிடையே ஆன்மீக வளர்ச்சியையும் பௌத்த மத விழிப்புணர்வையும் வளர்க்கும் வகையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மூலம் பல விசேட நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

2025 புத்த வருட அரச வெசாக் விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையும் இங்கு வெளியிடப்பட்டதுடன், அதன் முதல் நினைவு முத்திரை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை