முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிலிருந்து (CIABOC) இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து அறிக்கை அளிப்பதற்காக, மகிந்த ராஜபக்ச இன்று காலை (12) CIABOC முன்னிலையானார்.
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் குறித்து வாக்குமூலம் கோரி, இலஞ்ச ஆணைக்குழு விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
