Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜெயசங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம்

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுஸ ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ச.. ஜோசப் விஜய் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 12-05-2026 எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் 12.05.2026 செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின் மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.
இராமநாதபுரம் மாவட் டம், மண்டபம் பகுதியை சார்ந்த திருவாளர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.05.2026 அன்று நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர் களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை யால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ப தையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.
எனவே இப்பிரச் சனை குறித்து இலங்கை அதிகாரி களை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உட னடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை