எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ககலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பில் எமது அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவித்தார். அதன் பிரகாரம் சில கட்டுப்பாடுகளுடன் வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. “
“எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறோம் என்று விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப நிலைக்கு ஆளாக்க வேண்டாம் என்று சில நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இறக்குமதியில் முடிவெடுக்கும் போது, அவை நமது இருப்பு மற்றும் நமது பொருளாதாரத்தின் மீது அக்கறை கொண்டு முடிவுகளை எடுக்கின்றன. இல்லையெனில், பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தில் இருக்கும், இல்லையெனில் அந்த முடிவை எடுக்க நாங்கள் தயாராக இல்லை..” என்றும் தெரிவித்தார்
#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment #NewsUpdate #news2024 #trendingnews #NPP #nalindajayatissa #vehicleimports #deputyfinanceminister
