ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ) ஆங்கிலத்தில் எழுதிய WE ARE A PART, NOT APART எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் ” (முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்) எனும் நூலும் ,

பேராசிரியர் ராஜன் ஹூல் ஆங்கிலத்தில் எழுதிய ”Srilanka s easter Tragedy (When The Deep State Gets Out Its Depth ) , சிரேஸ்ட ஊடகவியலாளர் மகிந்த ஹத்தக்க சிங்களத்திலும் எழுதிய நூல்களினை , சிரேஷ்ட ஊடகவியலாளரும் , ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா பேரத்தின் தலைவருமான என் எம் அமீன் அவர்களால் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட ” உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் – மறைகரம் வெளிப்பட்டபோது” ஆகிய நூல்களின் சிறப்பான வெளியீட்டு நிகழ்வு
கொழும்பு 7 ல் அமைந்துள்ள , ஸ்ரீலங்கா பவுண்டேஷன் பிரதான மாநாட்டு மண்டபத்தில் 30.01.2025 ( ஞாயிறு )மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலி, ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ. சுமந்திரன், எம்.எம். சுகைர், பேராசிரியர் எம்.எஸ் அனஸ், சிங்கள மொழி சிரேஸ்ட ஊடகவியலாளர் மகிந்த ஹத்தக்க ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், நுவரெலியா பா.உறுப்பினர் திகாம்பரம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். நளீம் உட்பட , ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ,ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் என பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் .

நிகழ்வில் எம்.எ. சுமந்திரன், மகிந்த ஹத்தக்க ஆகியோர் இரு நூல்களின் ஆய்வு உரையை நிகழ்த்தினர் .
நிகழ்வின் இறுதியில், நூலாசிரியரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்புரையினையும் , போரத்தின் தலைவரும் , சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் . எம். அமீன் நன்றி உரையினையும் வழங்கினர் .

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment #NewsUpdate #news2024 #trendingnews #followers #hightlight #SLMC #RaufHakeem #srilankamuslimmediaforum #booklaunch2025
