போலந்து நாட்டை சேர்ந்த 61 வயதுடைய பிரஜை ஒருவர் நேற்று (20.01 ) மாலை பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற சமயம் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை – தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது, அவர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் ஹோட்டலின் உயிர் பாதுகாப்பு அதிகாரியால் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
