யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்தக்கட்டம் தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment #NewsUpdate #news2024 #trendingnews #followers #hightlight #JaffnaUniversity #nalindajayatissa
