பாகிஸ்தான் வணிகவளாகத்தில் தீவிபத்து – 21 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் நேற்று (18) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தீ விபத்தில் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
