இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடதிற்கு பதவிக்கு ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணி தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால், ஜகத் பிரியங்கரவும் எதிர்க்கட்சியில் அமர உள்ளார். அதன்படி, ஆளும் கட்சி ஒரு இடத்தையும், எதிர்க்கட்சி ஒரு இடத்தையும் இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment #MemberOfParliment #JagatPriyankara #puththalamdistric #slgoverment
