Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

பாரிய சுழல் காற்றினால் தம்பலகாமம் பிரதேச பல வீடுகளும், கடைகளும் சேதம்

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் வீசிய சுழல் காற்று காரணமாக பாலம் போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பத்தினிபுரம், இக்பால் நகர் முதலான பகுதிகளில் 5 இற்கும் மேற்பட்ட வீடுகளும்,கடையொன்றும் சேதமடைந்துள்ளன.

அவற்றின் கூரைகள் காற்றில் அள்ளிச்செல்லப்பட்டுள்ளதுடன் சிலர் காயங்களுக்கும் உட்பட்டுள்ளனர்.

தற்காலிக இடமின்றி தவிக்கும் மக்கள் அடுத்த மழை பெய்தால் எங்கே செல்வதென அங்கலாய்க்கின்றனர்.

குடியிருப்பு பகுதி சேதமடைந்துள்ளதாலும் பல்வேறு அசௌகரியங்களை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

உரிய அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை