Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

மஹிந்தவின் லஞ்ச ஊழல் ஆஜருக்கு பின் ஜனாதிபதியின் கருத்து

மஹிந்தவின் லஞ்ச ஊழல் ஆஜருக்கு பின் ஜனாதிபதியின் கருத்து

நாட்டின் ஜனாதிபதியோ அல்லது கிராம உத்தியோகத்தரோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கீழே இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் அதிகாரம் இருந்தால், அரசியல் அதிகாரத்துடன் தொடர்பு இருந்தால், பணம் இருந்தால், செல்வாக்கு இருந்தால் அவர்கள் மீதான சட்ட அமுலாக்கம் நடைபெறாத ஓர் கலாசாரம் கடந்த காலங்களில் காணப்பட்டது .
அந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என
அரசு அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஒரு சம்பவம் தொடர்பில் தமது பெயர் தொடர்பு பட்டியிருந்தால் தம்மிடம் விசாரணை நடத்துவதில் எவ்வித தவறும் கிடையாது
அரசியல் அதிகாரம் கொண்டவர்களிடம் விசாரணையை நடத்துவது மாபெரும் குற்றம் என்னும் ஓர் நிலைப்பாட்டை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றது

அனைவரும் சட்டத்திற்கு கீழே இருக்க வேண்டும் எனவும் சட்டத்திற்கு அமையவே செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச விசாரணைக்காக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை