Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீட்டை வழங்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை கோரிக்கை

திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீட்டை வழங்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை கோரிக்கை

அதிகரித்து வரும் உலகளாவிய டீசல் விலை மற்றும்
ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியைத் சமாளிக்க, திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீட்டை வழங்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை போக்குவரத்து அமைச்சு ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி தம்மிக ரத்ன கருத்து வெளியிடுகையில்,

கடந்த ஆண்டு ஊழியர்களின் வேதனச் செலவினங்களை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் மாதம் தோறும் சுமார் 274 மில்லியன் ரூபாய் வீதம், ஆறு மாத காலத்திற்கு நிதி உதவி வழங்கியிருந்தது.

எனினும், அந்த உதவித் திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளதால், சபையினால் அதிகரிக்கப்பட்ட நடப்புச் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் போயுள்ளது.

உலக சந்தையில் டீசல் விலை அதிகரித்தமை சபையின் ஒட்டுமொத்த இயக்கச் செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளது.

அண்மையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வேதன உயர்வு காரணமாக, சபைக்கு மேலதிக நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு காரணிகளாலேயே திறைசேரியின் உதவி கோரப்பட்டுள்ளது.

திறைசேரியின் நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், தினசரி பேருந்து போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்பட மாட்டாது என உறுதியளித்த தம்மிக ரத்ன, ஆனால் ஊழியர்களுக்கான வேதனத்தை வழங்குவதில் சபை பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார்.

“நிதி உரிய நேரத்தில் கிடைக்காவிடின் ஊழியர்களின் வேதனத்தை வழங்க முடியாது போகும். அவ்வாறானதொரு சூழ்நிலையில், அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன,” என அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை