Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

தவறி விழுந்த தந்தையின் கீழ், சிக்கி மூன்று வயது சிறுவன் மரணம்

தவறி விழுந்த தந்தையின் கீழ், சிக்கி மூன்று வயது சிறுவன் மரணம்

கம்பளை – நாரண்விட்ட பகுதியில் கூரை இருந்து தவறி விழுந்த தந்தையின் கீழ், சிக்கி மூன்று வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கம்பளை – நாரண்விட்ட, பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், வீட்டின் கூரை பகுதியில் இருந்த நீர் குழாயை எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார்.

இதன்போது, தந்தை மேலே ஏறுவதை மூன்று வயது சிறுவன் கீழே நின்று பார்த்து கொண்டிருக்கையில், மாடிப்பகுதியிலிருந்த ஒரு பலகை உடைந்து, தந்தை சிறுவன் மேல் விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த தந்தையும் மகனும் கம்பொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த தந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கம்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை