லெபனான் நாட்டில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே, இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளில் தாங்கள் பங்கேற்போம் என்று லெபனான் அரசு அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லெபனான் தரப்பிலிருந்து இந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது
