கர்நாடகாவில் ‘தக் லைப்’ படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்தை வெளியிட தடை விதித்தது.
இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவில் ‘தக் லைப்’ படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த இந்த மனுவில், கர்நாடக மாநில அரசு,
காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய கோரியும் கமல்ஹாசன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கடிதத்தில் ஏன் மன்னிப்பு எனும் வார்த்தை இல்லை..? மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறார் கமல்?
கன்னடத்தை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம்; மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? பிரச்சினையின் தீவிரத்தை கமல் உணர வேண்டும்; திரைப்படத்தை விட இந்தியாவின் ஒற்றுமை பெரிது என நீதிபதி கூறி இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவில் ‘தக் லைப்’ படம் ஒத்தி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
