பாகிஸ்தானில் கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகளில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
பாகிஸ்தானின் பாராளுமன்றத்தின் 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதுவரை வெளியான முடிவுகளில் இம்ரான் காநின் சுயேச்சை வேட்பாளர்கள் 93 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -என் 75 தொகுதிகளிலும், பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
இந் நிலையில் ராவல்பிண்டி நகரின் தேர்தல் ஆணையாளர் லியாகத் அலி நேற்று அதிரடி தகவல் ஒன்றை வெளிஇட்டுள்ளார் .
‘ பாராளுமன்ற தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதற்கு தலைமை தேர்தல் ஆணையரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உறுதுணையாகவுள்ளனர். பல்வேறு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர். ஆனால், போலி வாக்குச்சீட்டுகள் மூலம் மற்ற கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த மோசடியை கண்டித்து எனது பதவியை இராஜினாமா செய்துவிட்டேன் என லியாகத் அலி தெரிவித்துள்ளார் .
#NewsBar #newshut #todaynews #pakistannews #ImranKhan #WorldNews #LiaqatAli
