விஜயிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை..!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ நடத்திய முதல் நாள் விசாரணை இன்று நிறைவுபெற்றுள்ளது.
இதற்கமைய, நாளை(13) காலை மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
சுமார் 7 மணி நேர விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய அவர், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஒன்றரை மணிநேரம் தனியறையில் கையெழுத்திடுவதற்காக வைக்கப்பட்டிருந்தார் .
இதனையடுத்து கையொப்பமிட்டு வெளியேறிய அவர், தான் தங்கியிருகும் ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது சிபிஐ அதிகாரிகள் மூன்று முக்கிய கேள்விகளை விஜய்யிடம் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கேள்விகள் கடுமையானவை மற்றும் முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் கேள்வி, ‘நீங்கள் ஒரு திறந்த வாகனத்தில் நின்று கொண்டிருந்தீர்கள், கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுவது தெளிவாகத் தெரிந்தும், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தது ஏன்?’
‘சிலர் மயங்கி விழுந்தபோது, நீங்கள் கூட்டத்திற்குத் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்துக் கொண்டிருந்தீர்கள், அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் ஏன் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை?’
‘நீங்கள் ஏன் சரியான நேரத்தில் கூட்ட இடத்திற்கு வரவில்லை? உங்கள் தாமதம் கூட்டத்தில் அமைதியின்மையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. இது உங்கள் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் செயலா?’
