கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட கற்பாறை சரிவு காரணமாக திங்கட்கிழமை (03.08) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி, இன்று செவ்வாய்க்கிழமை (04.08) காலை முதல் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
கற்பாறை சரிவைத் தொடர்ந்து வாகனப் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வீதி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேவையான சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, தற்போது வாகனப் போக்குவரத்துக்கு வீதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



