Tuesday, July 28, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

சமூக சேவை – கட்டுரை

newsbar

சஞ்சிகைக்கான ஆக்கம்

சமூக சேவை

•சமூக ரீதியான புண்ணியத்திற்கான சேவையாகும் இது சமயபோதனைகளால் மனிதாபிமான வகையில் சமய நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்கள் அடிப்படையில் ஒருவருக்கொருவர் மேற்கொள்ளப்படும் உதவியாகும்!!!

இவ்வுதவியானது எந்த நேரத்திலும், எப்போழுதும் எந்தவிதமான வரையறைகள் மட்டும் கட்டுக்கோட்பாடுகள் இன்றி பணம் ,பொருள்,தானம் ,தொண்டுகள் மூலம் ஆற்றும் சேவையாகும் …

இவ்வாறான சேவையானது சமூகத்தில் தேவையுடைய வர்களுக்கு நிவாரணம் அழிப்பதை குறிப்பிடலாம்…
மேலும் இச்சேவையானது நடைமுறை அடிப்படையிலான நிபுணத்துவம் மற்றும் சமூக மாற்றம் மற்றும் மேம்பாடு சமூக ஒருங்கிணைப்பு அதிகாரமளித்தல் மற்றும் மக்கள் விடுதலை ஆகியவற்றை ஊக்குவிப்பதனை குறிக்கும்…

•சமூகசேவையின் அடிப்படையான பண்புகளில் ஒன்றாக மனிதர்களிடையே நல்லுறவு மற்றும் ஒற்றுமையையும் உருவாக்குவதனைக்
குறிக்கும்
இவ்வாறான பணியில் ஈடுபடுவதன் மூலம் அச்சேவையை மேற்கொள்பவர் அல்லது சமூக சேவையாளர் சேவைப்பயனாளிகளிடமிருந்து எவ்விதமான பிரதிபலன்களையும் எதிர்பார்த்து செயல்பட முடியாது என்பதுவே இதன் அடிப்படையாகும்
இதன் மூலம் மனிதன் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் பெற்றவர் என்பதனையும் அறிந்து கொள்ள முடிகிறது
மேலும் தன்னார்வமான முறையில் சமூக சேவையில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் தங்கள் சமூக நலன்னிற்காக பங்களிப்பை செலுத்துவதால் பெருமிதம் அடைவதுண்டு …

•அந்தவகையில் சமூகசேவையானது பல்வேறுபட்ட வழிகளில் சமூகத்தின் நலன் மற்றும் விருத்திக்கு பங்களிப்பதனை பார்க்கும் போது
முதலில் கல்வி பற்றி நோக்கும் போது ,
அந்தவகையில் கல்வியை மேம்படுத்துவது சமூக சேவையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் அதன் அடிப்படையில்
குடும்பத்தில் ஏழ்மை நிலையைப் போக்கி கல்வியை விட்டு விட்டு இளவயதிலேயே பொருள் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவதை தடுக்க பல இயக்கம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் வருந்தி பிற்காலத்தில் ஏழ்மை காரணமாக கல்வியை பாதில் நிறுத்திவிடாமல் இருப்பதற்காக மாணவச் செல்வங்களுக்கு
ஆயிரக்கணக்கான புலமை பரிசில்கள் வழங்கி வருவதனை எமக்கு கண்கூடாக கண்டுகொள்ளலாம்

அடுத்தபடியாக சுகாதார சேவையினை நோக்கும் போது சமூகத்திலேயை சுகாதார சேவைகள் மற்றும் பிரிவுகளிலும் சமூக சேவை மேற்கொள்ளப்பட்டு வருவதனைக் குறிப்பிடலாம் அது எவ்வாறு மேற்கொள்வது என்பதை பார்க்கும் போது வறுமையான பகுதிகள் மற்றும் கிராமப்புறங்கள் மற்றும் வறுமையான பகுதிகளிலும் உட்பட பாரிய இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகின்றன அதில் அனைத்து விதமான மக்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் , சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன
இது மருத்துவ வசதி இன்றித்தவிப்பவர்களுக்கும் மேலும் தங்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் செயற்திட்டங்கள் பெரும் உதவியாக அமையப்பெரும்

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இதனை நோக்குகையில்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மரம் நடுதல், வனவிலங்குகளின் வாழ்விட மறு சீரமைப்பு அல்லது மறுசீரமைப்பு அல்லது கடற்கரைகளை சுத்தம் செய்தல் இவ்வாறான செயற்பாடுகளைக் குறிப்பிடலாம்

ஆதரவற்றோர் நலன் சமூகசேவை , ஆதரவற்றோர்கள் மற்றும் துன்பப்படுபவர்களுக்கும்
பேரும் உதவியாக உள்ளமையினையும் குறிப்பிடலாம் உதாரணமாக சில அமைப்புகளில் ஆதரவற்றோருக்கு அடிப்படையான தேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்துவதனையும் குறிப்பிடலாம்

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் எனும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாக்கப்படல் , மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மேலதிக வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்குகின்றமையினையும்
குறிப்பிடலாம்

நம்பிக்கை மற்றும் மனநலம் எனும் போது தன்னார்வ அமைப்புகள் மனநல முகாம்கள் நடத்தி ,மனநலப் பிரச்சினைகளை கொண்ட நபர்களுக்கு வலுவூட்டும் நிகழ்வு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றமையினையும் குறிப்பிடப்பட முடியும்

சிறந்த சமூக சேவையானது மனிதனை சிறந்த முறையில் உருவாக்கும்
மேலும் வாழ்க்கையினை அர்ப்பணிக்கும் தியாகநிலை உருவாகும்
பிறரை மகிழ்வூட்டவும் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க முயற்சிப்பார்கள் தன்னார்வ மக்கள்
இவ்வாறான சேவையானது உள்அமைதி மட்டும் அல்லாது சமூகத்தையும் உயர்த்தக்கூடியவாறு அமையப் பெறும்

சிறந்த சமூக சேவையானது மனதால் ஏற்படும் ஒரு உயர்வான செயல் எனவும் கூறமுடியும்
தன்னலம் இன்றி பிறர் நலன் கருதி செயல்படுகின்ற அமைப்பாகும் சமூக முன்னேற்றம் உயர்வுகளைத்தூண்டும் முக்கிய கருதுகோல்லாகும்
“மற்றவர்களுக்கு உதவும் பணியே மிகவும் சிறப்பான பணி என்பது யாவரும் அறிந்த கருத்தல்லவா

மேலும் பார்க்கும் போது பள்ளிகள் நடத்தல்
இயற்கை அனர்த்தம், இயற்கை விபத்துகளின் போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அடிப்படைவசதிகள் மற்றும் அன்றாட செயற்பாட்டு வசதிகளை செய்து கொடுத்தல் அது போலவே மரம் நடுதல் மற்றும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் நாளாந்தம் காடுகளை அழிக்கும் சூழலில் பசுமை நிறைந்த மரங்களை நட்டல் மற்றும் தண்ணீர் ஆதாரங்களை பாதுகாத்தல் போன்றவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன

மேலும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு,
தொழிற்பயிற்சி வழங்கி அவர்களின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்துவதலும் ஒரு சிறந்த சமூக சேவை எனலாம்

ஆகவே இறுதியாக கூறுகையில்
சமூக சேவை எனப்படும் போது அதுவே ஒரு உன்னதமான பணியாகும்
இது மனித நேயத்தினுடாக ஒற்றுமையை மற்றும் சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை சமூகத்தில் ஏற்படுத்தும்
இதன் மூலம் தனிப்பட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் சமுதாயத்திற்கு நேர் எதிர் மாற்றங்களை ஏற்படுத்தலாம்
இதுவே எம் அனைவரினதும் கடையையும் பொறுப்பும் ஆகும்
சமூகத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையாகவும் செயல்படுவதும் உண்டு எனவே ஒவ்வொரு சமூக சேவையில் பங்கேற்று நம் சமூகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்பி சிறந்த சமூகத்தினை உருவாக்கம் செய்வதே எம் அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.

இஷ்பாஇக்ரம்

மக்கொனை
சமூகப்பணிமாணவி

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை