Tuesday, July 28, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

சமூகப் பணியினுடைய விழுமியங்கள் – கட்டுரை

newsbar

சமூகப் பணியினுடைய விழுமியங்கள்

சமூகப் பணியானது ஒரு தனி நபர் அல்லது ஒரு குழுவினர் சமூக நலன் கருதி மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும் இது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவும் ஒரு துறையாக காணப்படுகின்றது

சமூகப் பணியினுடைய அடிப்படை விழுமியங்களாக பின்வருமாறு :-

சமூகப்பணி விழுமியங்களானது சமூகப் பணியாளர்களின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாகவும் சமூக மாற்றத்திற்கு உந்துதலாகவும் காணப்படுகின்றது

1 . மனித நேயம்
ஒவ்வொரு மனிதனும் மதிப்புடையவர் என்ற நம்பிக்கை இது அவர்களின் தனித்துவம் பலவீனம் வலிமை ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதை குறிக்கின்றது

  1. சமத்துவம்
    அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்ற கொள்கை இது சமூக பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவத்தை நோக்கிய போராட்டத்தை கொண்டது
  2. நீதி
    ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை இது சமூக அநீதிகளை எதிர்த்து போராடுவதை உள்ளடக்கியது
    4 . சுதந்திரம்
    ஒவ்வொரு தனிநபருக்கும் தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டுப்படுத்தும் உரிமை இது தனி நபர்களின் தன்னிறைவு மற்றும் சுய முடிவெடுக்கும் திறனை வலியுறுத்துகின்றது
    5 . பங்கேற்பு
    சமூக மாற்றத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற கொள்கையை உடையது இது சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண மக்களை ஒன்றிணைப்பதை உள்ளடக்கியது

சமூகப் பணியின் விழுமியங்கள் செயற்பாட்டில் இந்த விளிமியங்கள் சமூகப் பணியாளரின் தினசரி செயல்பாடுகளில் பின்வருமாறு வெளிப்படுகின்றது
1 நேரடி சேவை
ஏழை எளியவர் மாற்றுத்திறனாளி முதியோர் போன்றோருக்கு உதவுதல்
2 சமூக ஆய்வு
சமூகப் பிரச்சினைகளை அடையாளம் காணவும் ஆய்வு செய்தலும்
3 திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல்
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தலை குறிக்கிறது
4 கல்வி
மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குதல்

விழுமியங்கள் மற்றும் சமூக மாற்றம் சமூக பணியின் விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூக பணியாளர்கள் சமூகத்தில் உள்ள அநீதிகளை எதிர்த்து போராடி ஒரு சமத்துவமான நீதியான சமூகத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் . (அந்த வகையில் நானும் சமூக பணியாளர் என்ற வகையில் பெருமிதம் அடைகிறேன். )

FaleeL Fathima Fasna ( Fazla )
அநுராதாபுரம்
சமூகப்பணி இளங்கலைமானி சிறப்பு பட்டபடிப்பு
முதலாம் வருட மாணவி
2023 / 2024
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
சீதுவ

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை