⚠️ மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு – NBRO அறிவிப்பு
நாட்டில் நிலவும் தொடர் மழையுடனான காலநிலை காரணமாக, மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை (05) காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும்.
மேலும், குறிப்பிட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔴 கண்டி மாவட்டம்
- உடுதும்பறை
- கங்க இஹள கோரளை
- பஸ்பாகே
🔴 கேகாலை மாவட்டம்
- யட்டியாந்தோட்டை
🔴 நுவரெலியா மாவட்டம்
- அம்பகமுவ
- நோர்வூட்
தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.



