Thursday, July 30, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

பென்தோட்டையில் பாராமோட்டர் விபத்து – பாலஸ்தீனப் பெண் உயிரிழப்பு

newsbar

பென்தோட்டையில் பாராமோட்டர் விபத்து – பாலஸ்தீனப் பெண் உயிரிழப்பு

பென்தோட்டை கடற்பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற சக்தி இயந்திரம் பொருத்தப்பட்ட பாராசூட் (பாராமோட்டர்) விபத்தில், 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தெரிவிப்பதாவது, ஜூலை 29ஆம் திகதி பென்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பாராமோட்டர் சவாரியின்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பாராமோட்டர் கடலில் விழுந்ததில், 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் உயிரிழந்தார். அதேவேளை, பாராமோட்டரை இயக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பென்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை