நீர்கொழும்பு கலவர வழக்கில் CID வெளியிட்ட புதிய தகவல்கள்; பிக்குவின் வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்கள்
அண்மையில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.
இந்த வழக்கில், ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பிக்கு ஒருவர், விசாரணையின் போது முக்கிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.
அவரது சாட்சியத்தின்படி, ஜூலை 15ஆம் தேதி மதிய உணவு நேரத்தில், முகத்தை மூடிய சுமார் 15 பேர் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், மறுநாள் காலை சிறைச்சாலை அதிகாரிகள் எவரும் அங்கு இல்லாத நிலையில், கைதிகளே தங்களுக்குள் உணவைப் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கப்பட்டதுடன், சில கைதிகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தனது வாக்குமூலத்தில் அந்தப் பிக்கு தெரிவித்துள்ளார்.



