Tuesday, July 28, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

நாமல் ராஜபக்சவின் திடீர் இந்தியப் பயணம்; சந்தித்தவர்கள் யார்?

newsbar

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் இந்தியாவுக்கு குறுகிய கால இரகசிய பயணமொன்றை மேற்கொண்டிருந்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தப் பயணம் தொடர்பான தகவல், அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே தெரியப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களையும் நாமல் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவரை கௌரவிக்கும் வகையில் பிரத்யேக சைவ இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது.

இருப்பினும், அவர் சந்தித்த அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் அந்தச் சந்திப்புகளின் நோக்கம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

ஒரு நாள் மட்டுமே இந்தியாவில் தங்கியிருந்த நாமல் ராஜபக்ச, மறுநாள் இரவு மீண்டும் இலங்கை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை