Thursday, July 30, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

ரிஷாட் mp யின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம்

newsbar

ஹிஷாலினி மரண வழக்கு: “சிறுமி தண்ணீர் மட்டுமே கேட்டார்” – சுவசெரிய அதிகாரியின் நீதிமன்ற சாட்சி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான கொழும்பு பௌத்தலோக மாவத்தையிலுள்ள வீட்டில் 2021ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா சாட்சியமளித்தார்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்றதாகவும், கராஜ் வழியாக உள்ளே நுழைந்தபோது படிக்கட்டில் படுக்கை விரிப்பால் போர்த்தப்பட்ட நிலையில் சிறுமி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அப்போது சிறுமியின் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை என்றும், கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் தென்பட்டதாகவும் கூறினார்.

அந்த இடத்தில் எரிந்த தோலின் வாசனை போன்ற நாற்றம் வீசியதாக தெரிவித்த அவர், அதன் தன்மையை உறுதியாகக் கூற முடியாது என்றாலும் தீக்காயங்களால் ஏற்பட்ட வாசனையாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

சிறுமி தன்னிடம் “தண்ணீர்” மட்டுமே கேட்டதாகவும், அதற்கு அப்பால் வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் சாட்சி அளித்தார். பின்னர் உடனடியாக அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

சிறுமி உயிரிழந்த பின்னரே பொலிஸார் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பாக எந்தவிதமான முறையற்ற அழுத்தமும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், அவசர அழைப்பு கிடைத்தபோது தீக்காயமடைந்தவருக்கு வழங்க வேண்டிய அடிப்படை முதலுதவி வழிமுறைகள் தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் தாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அவை பின்பற்றப்படவில்லை என்றும் சாட்சியமளித்தார்.

2021ஆம் ஆண்டு கிடைத்த முதல் அவசர அழைப்பில், எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் இருப்பதாகவே தகவல் வழங்கப்பட்டிருந்ததாகவும், சுவசெரிய சேவைக்கு வரும் அனைத்து அழைப்புகளும் வழக்கம்போல் பதிவு செய்யப்பட்டிருக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணையின் போது, ஆரம்ப அழைப்பில் தீக்காயமடைந்த சிறுமி குறித்து நேரடியாக எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை