Thursday, July 30, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

ரி 20 உலக கிண்ணம் 2026

newsbar

10-வது ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 7-ந் திகதி முதல் மார்ச் 8-ந் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 

இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பெப்.7-ந் திகதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பெப்.15-ந் திகதி கொழும்பில் சந்திக்கிறது.

இந்த நிலையில். ரி 20 உலகக் கிண்ண போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கிண்ண  இந்திய அணி விவரம்:-

அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாவொஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை