பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக இரண்டு நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி சரித் அபேசிங்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று(30.07.2026) அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா என்ற சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல்காரரின் மனைவியிடமிருந்து ரூ. 120 மில்லியன் இலஞ்சம் பெற்றது தொடர்பான ஒரு சம்பவத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரகித் ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு, கடந்த 28ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்றுமுன்தினம்(28.07.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, ரகித் ராஜபக்ச உட்பட இரண்டு சந்தேக நபர்கள் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியதால், சிறைக் காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
இருப்பினும், சந்தேக நபரான சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைக் காவலில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



