முட்டைகளின் விலைகள் இன்று முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
மக்காச் சோளத் தட்டுப்பாடு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக முட்டை உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் .
அதற்கமைய, விலையை அதிகரிக்காமல் கைத்தொழிலை மேலும் தொடர முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .
ஏனைய விலங்குத் தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
வெள்ளை முட்டையின் மொத்த விற்பனை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் மொத்த விற்பனை விலை 44 ரூபாவாகவும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
சில பிரதேசங்களில் முட்டையின் சில்லறை விலை தற்போது 50 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.



