Sunday, August 23, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

டுபாயில் சிக்கிய ‘பஸ் லலித்’ – இலங்கைக்கு அழைத்து வர CCIB அதிகாரிகள் விரைவு பயணம்!

newsbar

மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தின் (CCIB) விசேட அதிகாரிகள் குழுவொன்று அவசரமாக டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘லலித் கன்னங்கர’ அல்லது ‘பஸ் லலித்’ டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் டுபாயில் நிறைவடைந்துள்ளதாகவும், அவரை பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விசா உள்ளிட்ட ஆவணங்கள் தயாராகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, அவரை அழைத்து வருவதற்காக CCIB அதிகாரிகள் அவசரமாக டுபாய் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அவிசாவளை, ஹோமாகம மற்றும் அதுருகிரிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் ‘பஸ் லலித்’ தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பகுதிகளில் மற்றுமொரு பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஹந்தா’வுடன் இணைந்து அவர் செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் சட்டத்தரணிகள் ஊடாக பல்வேறு வழிகளில் தப்பிச் செல்ல அவர் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது டுபாயில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று (22) முதல் எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வெளிநாடுகளில் தங்கியுள்ள முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பல முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ளவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல உயிரிழப்புகளுக்கு காரணமாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் இது மற்றுமொரு முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை