கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான வட்டு எறிதல் F42-44/F61-64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, இலங்கைக்கான முதல் பதக்கத்தை பாரா-தட கள வீரர் பாலித பண்டார இன்று (30) பெற்றுக்கொடுத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு வட்டு எறிந்து திறமையை வெளிப்படுத்திய பண்டார, இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
வேல்ஸின் அலெட் டேவிஸ் தங்கப் பதக்கத்தையும், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அகீம் ஸ்டீவர்ட் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
பேர்மிங்ஹாமில் நடைபெற்ற 2022 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, கொமன்வெல்த் போட்டிகளில் பாலித பண்டார வெல்லும் தொடர்ச்சியான இரண்டாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
மேலும், இவரது 46.84 மீற்றர் எறிதலானது, இந்த விளையாட்டில் இலங்கை வீரரான பண்டாரவின் புதிய தனிப்பட்ட சிறந்த சாதனையாகவும் அமைந்துள்ளது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணசிங்க ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில், வரும் நாட்களில் இலங்கை மேலும் பல பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.



