எதிர்கால சமூகத்தை அழிவுக்குள்ளாக்குமா இள வயது கருத்தரிப்பு ?
தற்போதைய நவீன சமூகத்தில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் இளம் வயதினரை மையப்படுத்தி வளர்ந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரின் வாழ்வை மாத்திரமன்றி மற்றுமொரு உயிரையும் பாதிப்படைய செய்யும் பிரச்சினையாக காணப்படுவது இந்த “ இளம் வயது கருத்தரிப்பு ’’ என்பதாகும்.
இளம் வயது கருத்தரிப்பு (Early pregnancy) என்பது 18 வயதிற்கு முன்பாக தாய்மை அடைவதை குறிக்கின்றது. உலகம் முழுவதும் இளம் வயது கருத்தரிப்பு என்பது பெண்களின் உடல் , கல்வி மற்றும் சமூக நிலைக்கு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இதனால் சிறுவர் பாதுகாப்பு , உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் வளர்ச்சி ஆகியவை மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றன.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 15-19 வயதுடைய இளம் பருவத்தினர் ஒவ்வொரு ஆண்டும் 21மில்லியன் கருத்தரிக்கின்றனர் . இதில் ஏறக்குறைய 50% திட்டமிடப்படாதவை. இவர்களில் 12மில்லியன் கர்ப்பிணிகளே குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். ஏனைய கர்ப்பங்கள் கருக்கலைப்பில் முடிவடைகின்றது. அவை பெரும்பாலும் LMICS இல் பாதுகாப்பற்றது. 20-24 வயதுடைய பெண்களைவ விட 10-19 வயதுடைய தாய்மார்களே எக்லாம்ப்சியா , மகப்பேறியல் எண்டோமெட்ரிடிஸ் மற்றும் நோய்த்தொற்றுகளின் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.
உலகில் அதிகமான இளவயது கருத்தரிப்பு காணப்படும் நாடுகளில் துணை சஹாரா ஆரிரிக்கா (4.4%) பகுதிகள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக நைஜர்,மாலி மோசாம்பிக் மற்றும் மலாவி போன்ற நாடுகள் இளவயது கருத்தரிப்பில் உயர்வான வீதத்தில் காணப்படுகின்றன. இலத்தின்,அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற நாடுகளில் 2.3% என்ற வீதத்தில் காணப்படுகின்றது.
இலங்கையில் கண்டி போதனா வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இளவயது கருத்தரிப்பு தோராயமாக 6.1% ஆகும். சிங்களவர்கள்,தமிழர்,முஸ்லிம்களுக்கான இளவயது கருத்தரிப்பு வீதம் முறையே 87.4% ,8.2% மற்றும் 4.4% ஆக காணப்படுகின்றது. இதில் 97% பேர் பெற்றோர்களுடன் வாழ்வதால் சமூக ஆதரவு போதுமானதாக காணப்படுகின்றது.
இளவயது கருத்தரிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதை நோக்குவோமாயின்
முதல் காரணம் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் ஆகும்.நன்கு அறியப்பட்டவர்கள், அறியப்படாதவர்கள்,நண்பர்கள்,உறவினர்களாலேயே இது நிகழ்த்தப்படுகின்றது. 2023ம் ஆண்டின் முடிவில் வெளியிடப்பட்ட தகவலின்படி பதிவான சிறுவர்களுக்கெதிரான 5000 குற்றச் செயல்களில் 4000ற்கும் மேற்ப்பட்ட குற்றங்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடையதாகும். இதில் 167 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். மற்றுமொறு முக்கிய காரணம், இள வயது காதல் தொடர்பென கருதலாம். இந்த 167 சிறுமிகளில் 127 சிறுமி தமது காதலர்களால் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்களாவர்.
கட்டிளமை பருவத்தில் இத்தகைய எதிரப்பாலின கவர்ச்சி என்பது அதிகளவில் காணப்படும். இந்த கட்டத்தில் சரியான வழிகாட்டுதலின்மையே இந்நிலைக்கு முக்கிய காரணமாக காணப்படுகின்றது. இதனை தவிர்த்து கல்வி மற்றும் விழிப்புணர்வு பற்றாக்குறை , குடும்ப நிலை மற்றும் ஆதரவு குறைப்பாடு , ஊடக மற்றும் வணிக விளம்பரங்கள் மற்றும் விபச்சாரம் என்பவை காணப்படுகின்றன.
இதனால் இச்சிறுமிகளின் கல்வி இடைநிறுத்தப்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை இழந்து பொருளாதார ரீதியில் சவாலுக்குற்படுகின்றனர். தமது சுயமரியாதையை இழக்கின்றனர்,
உடல்ரீதியிலும் பல சவால்களை எதிர்க்கொள்கின்றனர். அவற்றை நோக்குவோமாயின் ,முதலில்”Eclampsia ” இது கர்ப்பிணிப் பெண்களில் ஏற்படும் ஒரு தீவிர அசாதாரணமான மருத்துவ நிலையாகும். இது வலிப்பு மற்றும் கோமா வரை செல்லக்கூடியது. அடுத்ததாக “pre-eclampsia ” இது கர்ப்பிணிப் பெண்களில் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இது அதிகரித்த இரத்த அழுத்தம் ( High blood pressure) மற்றும் சிறுநீர் வீக்கத்தை உண்டாக்கும். அடுத்ததாக “Gestational Diabetes ” இது கர்ப்பக்கால நீரிழிவு நோயாகும். இவர்கள் பாலியல் ரீதியிலும் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு அந்த வகையில் Hepatitis B (HBV) , Gonorrhoea மற்றும் HIV என்பன காணப்படுகின்றன. “ Endonetrities” இது கருப்பையில் தொற்று ஏற்படுதலாகும். இதனை தொடர்ந்து “Anemia ” என்பது ஹீமோக்ளோபின் ( RBC) குறைவாக உடலுக்கு ஒட்சிசனை வழங்கும் நிலையாகும். இதில் Under 7g/dl Severe Anemia என்பது கடுமையான நிலையாகும். 7-9.99 g/dl Moderate Anemia என்பது மிதமான அளவு என்றும் , 11g/dl Mild Anemia என்பது இலேசான நிலை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இளவயது கருத்தரிப்பில் காணப்படும் பிரதான பிரச்சினையே “குறைப்பிரசவம்” ஆகும். அதாவது 40 வாரம் என்பது ஒரு சராசரி நிறை பிரசவ காலமாகும். 37-42 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தை சரியான வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துடன் பிறக்கும். 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளையே குறைப்பிரசவம் என்கின்றோம். இதனால் அந்த குழந்தைக்கு சுவாசம் , செரிமானம் ,பார்வை ,மனநலம் ரீதியில் பாதிப்புக்கள் ஏற்ப்படுவதற்கான வாய்ப்பதிகமாகும். அடுத்தாக குறைந்த எடை கொண்ட குழந்தை , குறைந்த எடை கொண்ட குழந்தை 3.3 – 5.5 பவுண்டுகள் எடையை மட்டுமே கொண்டிருக்கும்.இவ்வாறான பிரச்சினைக்கான காரணங்களாக இளம் தாயார்களின் உடல் வளர்ச்சி போதாமை, ஒரு குழந்தையை பிரசவிக்கும் அளவிற்கு இடுப்பின் அளவுப்பகுதி போகாமையேயாகும் இதனால் தாய்க்கு மரணம் கூட நேரலாம். மேலும் இந்த வயதெல்லைகுற்பட்டவர்களுக்கு ஒரு குழந்தையை பராமரிக்கும் அளவிற்கு பக்குவமானதோர் மனநிலையும் காணப்படுவதில்லை.
இளவயது கருத்தரிப்பினை குறைப்பதற்காக,
- இளம் வயதினருக்கு பாலியல் கல்வி,பாதுகாப்பான பிறப்பு முறைகள்,தற்காப்பு சார் விழிப்புணர்வை வழங்கள்.
- குடும்பம் பிள்ளைகளுடன் சிறந்த உறவினை கட்டியெழுப்பல். அதாவது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடல்,அவர்களின் கருத்துக்களை செவிமடுத்தல்.
Good touch, Bad touch பற்றிய அறிவினை வழங்கல். - சிறுவர் பாதுகாப்பு , பாலியல் வன்முறை சார் சட்டங்களை வலுப்படுத்தல்.
- சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை வழங்கல்
- ஊடகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
- பள்ளிகளில் இவற்றை பற்றிய கருத்தரங்குகளை நடாத்துதல்.
போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொள்ளலாம்.
எனவே எம்மால் ஒரு பாரிய சமூகப்பிரச்சினையை முழுமையாக ஒரே தடவையில் ஒழித்து விட முடியாதென்பது உண்மையே ஆனால் அதனை சிறிது சிறிதாக குறைக்க எம்மால் முடிந்த முயற்சிகளை எடுத்திடுவோம்.
ஜெயகுமார் பிரவீனா
சமூகப்பணி இளங்கலைமானி (சிறப்பு) பட்டப்படிப்பு
முதலாம் வருட மாணவி
“ தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்” ( National institute of social development)
#newbar #Article



