Wednesday, July 29, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் முன்னாள் அமைச்சர்

newsbar

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சிறைச்சாலையின் நூலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சரண குணவர்தனவிற்கு கடந்த 9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் இநத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தேசி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம: சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன சக கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சுமூகமாக பழகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை