சி.டி. ஸ்கேன் இயந்திரக் கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடு விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
ஷிரந்தி ராஜபக்ச, டி.எஸ்.கே.எஸ். குமாரி மற்றும் கே.எச். நிரோஷா ஆகிய மூவருக்கும் எதிராகப் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிவான், விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



