இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை (20.10) முன்னிலையான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி, இன்று (20.10) முன்னிலையாகியுள்ளார்.



