Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீதான ஊழல் வழக்கு!

newsbar

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் தீபால் சஞ்சீவ ஆகியோருக்கு எதிரான ஊழல் வழக்கை ஜனவரி 5ஆம் திகதிக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இன்று (20) ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கையை அந்நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, அகில விராஜ் காரியவசம் தனது அதிகாரப்பூர்வ பணிக்காக ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் , 4 தற்காலிக ஊழியர்களை நியமித்து அவர்களை அரச பணிகளில் ஈடுபடுத்தாமல், அதில் 3 ஊழியர்களைத் தனக்குச் சொந்தமான தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மற்றொரு ஊழியரை உரிய அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தாமல், இந்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் ரூ. 2,768,836.14 சம்பளம் மற்றும் படிகளாக வழங்க செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை