Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

யோஷித பெற்ற சம்பளம் ரூ. 51 இலட்சம்! நீதிமன்றத்தில் வெளியான தகவல்”

newsbar

 

 

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலத்தில் மொத்தமாக 5,150,626 ரூபாவைச் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (ஒக்டோபர் 15) சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோதே இந்தத் தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர், யோஷித ராஜபக்ச கடற்படையில் சேவையாற்றிய காலப்பகுதிக்காகக் குறித்த தொகை சம்பளமாக வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தத் தொகையில் மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை