🏆 எல்.பி.எல். கிண்ணம் யாருக்கு? – ஜஃப்னா, கோல் அணிகள் இன்று பலப்பரீட்சை!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் கோல் கெலன்ட்ஸ் அணிகள் இன்று (08) நேருக்கு நேர் மோதுகின்றன.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
🔥 கிண்ணத்துக்கான இறுதிப் போராட்டம்
லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் ஜஃப்னா கிங்ஸ் முதலிடத்தையும், கோல் கெலன்ட்ஸ் இரண்டாவது இடத்தையும் பெற்றன.
முதலாவது தகுதிகாண் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணியை வீழ்த்திய ஜஃப்னா கிங்ஸ், நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது தகுதிப் போட்டியில் கொழும்பு கெப்ஸ் அணியை வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
⚔️ இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை
ஒருபுறம் லீக் சுற்றில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜஃப்னா கிங்ஸ்…
மறுபுறம் இரண்டாவது தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் வந்துள்ள கோல் கெலன்ட்ஸ்…
எல்.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.



