சமூகப்பணி முறைமையில் சமூக குழுப்பணி பற்றிய பார்வை
சமூகப்பணி முறைமைகள் எனப்படுவது மக்களுக்கு உதவுவதற்கான வழிகளைப் புரிந்து கொள்ள உதவுவதாகவும்.
சமூகப்பணி முறைமைகள் இரு வகைப்படும்.
1.நேரடி சமூகப்பணி முறைமை
2.மறைமுகமான சமூகப்பணி முறைமை
இதில் நேரடி சமூகப்பணி முறைமையில் ஒன்றான சமூக குழுப்பணி பற்றி நோக்கும் போது தனிநபர்களுடனும் குடும்பத்துடனும் பணியாற்றியதன் பின்னர் சில சமூகத்தில் மக்கள் குழுக்களாக செயல்படுவர்.ஆகவே அந்த குழுக்களுடன் பணியாற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.குழு அனுபவத்தின் ஊடாக தனிநபர் வளர்ச்சி விருத்தியை மேம்படுத்துவதற்கான கருவியாக சமூக கழுப்பணி காணப்படுகின்றது.
சமூக குழுப்பணி என்பது ஒரு பொதுவான இலக்கை அடைய ஒரு குழுவின் கூட்டு முயற்சியாகும், அதே நேரத்தில் உறவுகளையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக்குகிறது.
ஒரு ஜனநாயக சமூகம் உருவாவதற்கு இச் சமூக குழுப்பணி பயன்படுகிறது.ஒரு சமூக குழுப் பணியின் ஊடாக குழுவில் இருக்கின்ற ஒவ்வொருவருக்குமான சமூக பொறுப்புக்களை விருத்தி செய்கிறோம்.அதே போல ஒரு நாட்டினுடைய செயற்திறன் மிக்க ஒரு பிரஜையாக இருப்பதன் ஊடாக நாட்டில் சமூக ஜனநாயக விடயங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொள்ள கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் குழு அனுபவத்தின் ஊடாக ஒவ்வொரு தனிநபரும் தன்னுடைய வளர்ச்சி விருத்திக்கு ஒரு கருவியாக பயன்படுகிற அதேநேரம் அவர் அனுபவத்தின் ஊடாக ஒரு சமூக பொறுப்புள்ள OR சமூகத்தில் ஒரு வினைத்திறனான ஒரு பிரஜையாக மாறுவதற்கும் சமூகத்தில் ஜனநாயக விடயங்களை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்ய கூடிய ஒருவராக இருப்பார்.
ஒரு தனிநபர் நிறுவனத்திலோ சமயத்திலோ குழுவாக பணியாற்றுவதற்கு ஒரு சமூகப் பணியாளன் தேவையான வசதிப்படுத்தலில் மேற்கொள்வார் இவ்வசதிப்படுத்தலினூடாக ஒவ்வொரு தனிநபர்களும் குழுவில் இருக்கக்கூடிய ஏனைய நபர்களுடன் இடைவினையை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். இடைவினையை மேற்கொள்வதனூடாக தனக்குத்தேவையான அதாவது மற்றவர்களிடம் இருக்கக்கூடிய விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்ற அதே நேரம் மற்றவர்களும் தங்களிடம் இருக்கக்கூடிய விடயங்களை பகிர்ந்து கொள்வதன் ஊடாக அவர்கள் தங்களிடம் இருக்கக் கூடிய சகல விடயங்களையும் விருத்தி செய்யக்கூடிய தன்மையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சமூகக் குழுப்பணியில் பின்பற்றக்கூடிய செயல்முறை- Helping process of a social group work
1. குழுவை முன்திட்டமிடல்-
குழுவாக சேவைநாடிகளை இணைத்து செய்யப்படுகின்ற போது அந்தக் குழுவில் இருக்கின்ற அனைவரினதும் தேவைகளும் பெருமளவிற்கு ஒத்த தன்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவர்களை குழுவாக இணைத்து செயல்பட முடியாது அது பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக மாறும்.
2. குழு உருவாக்கல்-
ஒத்த தேவையுடையவர்களை ஒரு குழுவாக்கி பின்னர் குழுவை உருவாக்க வேண்டும்.
3.கணிப்பீடு செய்தல்-
குழுவை உருவாக்கியதன் பின்னர் அவர்களை ஒவ்வொருவராக மதீப்பீடு செய்தல். அதாவது அவர்களுடைய தேவை, இன, மத, பால் விருப்பங்கள் அவர்களுக்கு இருக்கக்கூடிய திறன்கள், தனிப்பட்ட விடயங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் போன்று சகல விதமான விடயங்களையும் மதீப்பீடு செய்தல்.
4. இலக்குகளை தீர்மானித்தல்-
குழுக்களின் இலக்குகளை அடையாளங்கண்டு அவற்றை தீர்மானித்தல்.
5. நிகழ்ச்சித் திட்டங்களை செய்தல்-
தீர்மானித்த இலக்குகளை அடைந்து கொள்வதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல்.
6. செயற்பாடுகள் மற்றும் பயன்பாடு -
சமூகத்தில் காணப்படும் ஊடகங்களின் செயற்பாடுகள் மற்றும் பயன்பாடுகளை இனங்கானல்.
- மதிப்பீடு செய்தல்
- முடிவுறுத்தல் மற்றும் பின்தொடர்தல்
முஹம்மது அனஸ் சாகிரா பானு,
கற்பிட்டி, புத்தளம்.
சமூகப்பணி இளங்கலைமானி (சிறப்பு) பட்டப்படிப்பு,
முதலாம் வருட மாணவி,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் (NISD)
