Thursday, July 30, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொடரும் நிவாரணப் பணிகள்

newsbar

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில்

மூன்றாவது நாளாக தொடரும் நிவாரணப் பணிகள்

உதவக் கூடியவர்களுக்கும் அழைப்பு விடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிமாவட்ட மக்களுக்காக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புக்கள் சேர்ந்து
நிவாரணம் சேகரிக்கும் பணியானது சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, (02) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் சாய்ந்தமருது – மாளிகைகாடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில், மூன்றாவது நாளான இன்றும் நிவாரணம் அறவிடும் பணிகள் குறித்த பொது அமைப்புகளினால் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த உயரிய பணியில் உங்களுடைய காத்திரமான பங்களிப்புகளை வழங்கி உதவி செய்ய விரும்பினால், கீழ் குறிப்பிடப்படும் அமானா வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு உதவிகளை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் 2025.12.01 ஆம் திகதி பள்ளிவாசலில் கூட்டப்பட்ட அனைத்துப் பள்ளிவாசல் தலைவர்கள், ஜம்இய்யத்துல் உலமா, வர்த்தக சங்கம், ஜனாஸா நலன்புரி சங்கம் மற்றும் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக நூற்றுக்கு மேற்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் கூட்டப்பட்ட கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, வெளிமாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் நிதியை வைப்பிலிடுதல் சம்பந்தமாக ஆராயப்பட்டது.

இதன்போது இப்பணியானது பல்வேறுபட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் காரணமாக பள்ளிவாசல் வங்கிக் கணக்கிலன்றி. பிரத்தியேகமான வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பதென சபையோரினால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்பிரகாரம் ஜம்இய்யத்துல் உலமா சபை, சாய்ந்தமருது-மாளிகைக்காடு கிளையின் தலைவரின் பெயரில் புதிதாக

Meeramohaideen Meerasahibu
A/C No 0220601531001
Amana Bank
Kalmunai

எனும் விபரம் கொண்ட வங்கிக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஆகையால், எந்தவித சந்தேகமும் இன்றி இக்கணக்கிலக்கத்துக்கு தங்களுடைய நிதி உதவியினை வைப்பிலிட முடியும் என்பதை பொறுப்புணர்வுடன் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் கூறிக் கொள்கிறது.

இவ்வங்கிக் கணக்கில் டிசம்பர் 06 ஆம் திகதி வரை மட்டுமே நிதி உதவிகளை வைப்பிலிட முடியும். டிசம்பர் 07 ஆம் திகதி இக்கணக்கிலக்கம் மூடப்படும். என்ற தீர்மானமும் சபையோரால் ஏக மனதாக எடுக்கப்பட்டதுடன் ஆறு (06) பேர் கொண்ட நம்பிக்கையான பொறுப்புதாரிகளும் இவ்வங்கிக் கணக்கிற்கான விடயங்களை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை