2027ஆம் ஆண்டு கண்டியில் மெட்ரோ சொகுசு நகரப் போக்குவரத்துப் பேருந்து சேவை!
2027ஆம் ஆண்டு கண்டியில் மெட்ரோ சொகுசு நகரப் போக்குவரத்துப் பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பகட்டத் திட்டமிடல் நடவடிக்கைகள் ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சாத்தியமான வழித்தடங்கள் மற்றும் சேவையின் செயற்பாட்டுத் தேவைகளை மதிப்பீடு செய்வதற்காக மெட்ரோ பேருந்து ஒன்று பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சார்த்த நடவடிக்கையின்போது, பொருத்தமான பேருந்து வழித்தடங்களை அடையாளம் காணுதல், தேவையான பேருந்துகளின் தொழில்நுட்பத் தரங்களைத் தீர்மானித்தல் மற்றும் பேருந்து நிறுத்தங்களை அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு கண்டியில் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



