Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

“220 கிலோ தங்கம் எங்கே? 11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்திலும் அதிரடி – சரத் பொன்சேகா!”

newsbar

 

 

 

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் தொடர்பிலும், 11 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தான் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து சுமார் 220 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். எனினும், பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச 110 கிலோ தங்கம் மட்டுமே மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் இராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னரும் தங்கம் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெரும்பகுதி கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, 11 மாணவர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் மிகவும் பாரதூரமான குற்றம் எனக் குறிப்பிட்ட அவர், கடத்தப்பட்ட மாணவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா சுட்டிக்காட்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியிலேயே அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ட்ராவிஸ் சின்னையாவை ஒரு மாத காலத்திற்குள் கடற்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கியதாகவும் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை