9 ஆண்டுகளில் ஜனாதிபதி மாளிகைகள் பராமரிப்புக்கு ரூ.35 கோடி செலவு – பிரதமர் ஹரிணி அமரசூரிய தகவல்
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜனாதிபதி மாளிகைகளின் பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்காக மொத்தமாக சுமார் 35 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (23.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளின் பராமரிப்பிற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகைகள், ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம், பூங்காக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ தங்குமிடக் கட்டடங்களின் பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்காகவே இந்தச் செலவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
பிரதமர் வெளியிட்ட தகவலின்படி, ஆண்டுவாரியான பராமரிப்பு மற்றும் திருத்தச் செலவுகள் பின்வருமாறு:
2018 – பராமரிப்பு: ரூ.15 மில்லியன் | திருத்தம்: ரூ.110 மில்லியன்
2019 – பராமரிப்பு: ரூ.15 மில்லியன் | திருத்தம்: ரூ.62 மில்லியன்
2020 – பராமரிப்பு: ரூ.12 மில்லியன் | திருத்தம்: ரூ.22.7 மில்லியன்
2021 – பராமரிப்பு: ரூ.10 மில்லியன் | திருத்தம்: ரூ.18.8 மில்லியன்
2022 – பராமரிப்பு: ரூ.12 மில்லியன் | திருத்தம்: ரூ.13 மில்லியன்
2023 – பராமரிப்பு: ரூ.26.04 மில்லியன் | திருத்தம்: ரூ.11 மில்லியன்
2024 – பராமரிப்பு: ரூ.13.09 மில்லியன் | திருத்தம்: ரூ.10.05 மில்லியன்
2025 – பராமரிப்பு: ரூ.7.05 மில்லியன் | திருத்தம்: ரூ.3 மில்லியன்
2026 (ஜனவரி – ஜூன்) – பராமரிப்பு: ரூ.3 மில்லியன் | திருத்தம்: ரூ.0.4 மில்லியன்
, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிப்போருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லாமல், மக்களின் தேவைகள் மற்றும் அரசாங்கப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.



