Tuesday, July 28, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

Eascca Academy யின் தொழிற்துறைக் கற்கைநெறி திட்டம்

newsbar

புற்றுநோயாளர் பராமரிப்பு என்னும் மனிதநேய சேவையின் மூலம் முழு இலங்கை மக்களதும் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பினை வென்ற ”Eascca Hospice ” எனப்படும் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது, தனது உயரிய மனிதநேய பயணத்தின் அடுத்த கட்டமாக ”Eascca Medical Village ”எனும் மாபெரும் சமூகநல திட்டத்தினை உருவாக்கிவருகிறது.
அந்த Eascca Medical Village திட்டத்தின் முக்கிய அங்கமாக Eascca Academy யினை அறிமுகம்செய்திருக்கின்றது.

இந்த Eascca Academy யானது கல்விப் பொதுத்தராதர சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறமுடியாமல் நம்பிக்கையிழந்து நிற்கும் இளைஞர் யுவதிகளுக்கான புதிய வாழ்க்கை பாதையை உருவாக்கிக்கொடுக்கும் வகையிலான தாதிய உதவியாளர்(Nursing Assistant), நோயாளர் பராமரிப்பாளர்(Professional CareGiver),
மருந்தக தொழில்நுட்பவியலாளர்(Pharmacy Technician)
போன்ற தொழிற்துறைக் கற்கைநெறிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நீங்கள் கல்வித் பொதுத் தராதர சாதாரண தரத்தில் என்ன பெறுபேறுகளை வைத்திருந்தாலும், கல்வித் பொதுத் தராதர உயர்தரத்தில் என்ன பிரிவில் கற்றிருந்தாலும் ,”EASCCA ACADEMY” யில் சுகாதாரத்துறை சார்ந்த சுமார் 35 கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதனால் உங்களது விருப்பம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான பொருத்தமான கற்கைநெறியினை நீங்கள் தெரிவுசெய்துகொள்ளலாம்.

  கல்வியைத் தொடர துறைசார் நிபுணர்களின் சரியான வழிகாட்டல்
  சுகாதார மற்றும் மருத்துவத் துறையை மையமாகக் கொண்ட தொழிற்கல்வி
  TVEC எனப்படும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தரப்படுத்தல், மேற்பார்வையில் தேசிய, சர்வதேச அங்கீகாரம் பெற்ற பயிற்சிகள் மற்றும் NVQ 4 தொழிற்தகைமைச் தர சான்றிதழ்கள்
  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்புக்களை நோக்கிய வழிகாட்டல்
  அதிக தொழில்வாய்ப்புக்களும், உயர் வருமானங்களையும் கொண்ட சுகாதாரத் துறைக்கான தயார்ப்படுத்தல்
  ஆளுமை, தொடர்பாடல் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாடு

மேலே குறிப்பிட்ட கற்கைநெறிகள் மற்றும் விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள, எதிர்வரும் ஜூலை மாதம் 21 ம் திகதி EASCCA மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் தலைசிறந்த வளவாளர்கள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டலுடன் நடைபெறவிருக்கும், கற்கைநெறிகள் பற்றிய அறிமுக நிகழ்வில் கலந்துகொள்ள அனைத்து மாணவர்களையும் Eascca Academy அழைக்கின்றது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கும், பதிவுகளுக்கும் 0777557553, 0744115324 ஆகிய இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.

”ஒரு பரீட்சைத் தோல்வி உங்களது வாழ்க்கையைத் தீர்மானிக்காது. சரியான வழிகாட்டல் உங்களது எதிர்காலத்தை மாற்றும்…”

 

தகவல்

Izzath Musthafa – Course Coordinator

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை