Tuesday, July 28, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் – வேறுபாடும் இன்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

newsbar

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவி, அந்தஸ்து அல்லது பொருளாதார வலிமை கொண்டவர்களாக இருந்தாலும், எந்த வேறுபாடும் இன்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (02.07) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலால் நாடு முழுவதும் பேரழிவு ஏற்பட்டதாகவும், குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பலர் கைகள், கால்களை இழந்து, இன்னும் ஆறாத மனவேதனைகளுடனும் உடல் காயங்களுடனும் வாழ்க்கையை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், இந்த தாக்குதலின் விளைவாக முஸ்லிம் சமூகம் முழு நாட்டிலும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும், குறிப்பாக காத்தான்குடி பிரதேசம் பெரும் நெருக்கடியை சந்தித்ததாகவும் அவர் கூறினார். அன்றைய சூழ்நிலை காரணமாக ஆளுநர் பதவிகள் மற்றும் அமைச்சர் பதவிகளை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார நஷ்டங்களையும் சந்திக்க நேர்ந்ததாகவும், கடைகள் மூடப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அச்சமும் துயரமும் நிலவியதாகவும் அவர் விளக்கியார்.

தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றைத் தடை செய்ய சிலர் முயற்சிப்பதாகவும், அந்த முயற்சிகளை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை