Tuesday, July 28, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

நீதித்துறையில் புதிய மாற்றம்… ஓய்வுவயது திருத்தம் குறித்து ஆலோசனை

newsbar

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனையை முன்னெடுத்து, அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்குமாறு தமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதித்துறையில் நிலவும் வழக்குத் தேக்கநிலையை குறைக்கும் நோக்கில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்க தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, இந்த யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அதனை விரிவாக ஆராய்ந்து கலந்துரையாட தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதும் அவசியம் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய நீதிபதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீதித்துறையிலிருந்தே முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இதற்கு முன்னர் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதிலும், அதனுடன் இணைந்து ஓய்வுபெறும் வயது திருத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நினைவூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை