Sunday, August 23, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

YWMA அமைப்பின் 40ஆண்டு பூர்த்தி விழா

newsbar

 

வை.டப்ளியு. எம்.ஏ.அமைப்பின் 40ஆண்டு பூர்த்தி விழாவும்
நூல் வெளியீட்டு விழாவும்

இளம் மாதர் முஸ்லிம்
சங்கத்தின்( YWMA) 40ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் நேற்று 2ஆம் திகதி , கொழும்பு 10, கிரேண்ட் ஸெனித் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .

சங்கத்தலைவி பவாஸா தாஹா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இலங்கைக்கான
மலேசிய தூதுவரான பத்ரி ஹிஷாம் ஆதம் அவர்களும் அவரது பாரியாரும் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்

இலங்கைக்கான பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்கான முன்னாள் தூதுவரான சட்டத்தரணி என்.எம்.ஸஹீத் , கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் முஹம்மத் ரஸூல்தீன். சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரையாற்றுவர்.

இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் வளர்ச்சிக்காக அரும்
பாடுபட்ட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இவ்விழாவின் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இச்சங்கத்தின் நாற்பது வருட சேவைகளை விளக்கும் ” வளர்ச்சிப்பாதையில் வை.டப்ளியு.எம்.ஏ ” (Our Growing Years ) என்ற பெயரில் நூலொன்றும் வெளியிடப்படவுள்ளது.
சிரேஷ்ட எழுத்தாளரும் இம்மாதர் சங்கத்தின் உப தலைவியுமான கலாபூசணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் இந்த நூலை எழுதியுள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் , நன்கொடையாளர்கள், சங்க உறுப்பினர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொன்டு சிறப்பித்துள்ளனர் .

 

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை