🚨 புளியங்குளத்தில் கோர விபத்து – இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
வவுனியா – புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூலர் ரக வாகனம் ஒன்று, டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலின் காரணமாக கூலர் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்த புளியங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



