Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

சவூதியில் சிக்கியுள்ள குழுவினர் … தரைவழியாக அண்டை நாட்டிற்குச் சென்று நாடு திரும்ப யோசனை

newsbar

சவூதியில் சிக்கியுள்ள குழுவினர் … தரைவழியாக அண்டை நாட்டிற்குச் சென்று நாடு திரும்ப யோசனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய
அங்கு சென்றிருந்த இலங்கை தூதுக்குழுவினர், விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் ரியாத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளான ரியாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதால், இக்குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அஸார்ட் நவாவி (PC) தலைமையிலான குழுவினர், மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை இறுதி செய்த பின்னர் நேற்று இலங்கை திரும்ப விருந்தனர்

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை ரியாத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

இக்குழுவினர் தரைவழியாக அண்டை நாட்டிற்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்புவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், பயண தூரம் மிக அதிகமாக இருப்பதால் அந்த யோசனை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், அனைத்து ஆவணப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், கருணை மனு சாதகமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் நவாவி ரியாத்திலிருந்து குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை