Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

எந்த அரசாங்கமும் செய்யாததை இந்த அரசாங்கம் செய்துவிட்டது!” – ஞானசாரர் அதிருப்தி

newsbar

காவி உடை அகற்றப்பட்ட விவகாரம்: கடும் விரக்தியில் ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறைச்சாலையில் தமக்கு காவி உடை அணிய அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர், பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஊடகங்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் காவி உடைக்குப் பதிலாக வெள்ளை நிற சிறை உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

தமக்கு இதற்கு முன்னர் பல தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு அரசாங்கமும் சிறைத் தண்டனைக் காலத்தில் காவி உடையை அகற்றுமாறு கூறியதில்லை என ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய அரசாங்கமே தமது காவி உடையை அகற்றி வெள்ளை நிற சிறை அங்கி அணிவித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறைச்சாலையில் காவி உடை அணிவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் மகா சங்கத்தினரே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “காவி உடை அணிந்திருந்தாலும், வெள்ளை சிறை உடை அணிந்திருந்தாலும் ஞானசாரர் எப்போதும் ஞானசாரர்தான்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டே இதுவரை தாம் செயற்பட்டு வந்துள்ளதாகவும், இதனையும் எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்த ஞானசார தேரர், “பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் கூறியவாறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, பொதுமன்னிப்புக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை