Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

நான் எந்த முதலீட்டையும் விளம்பரப்படுத்தவில்லை!” – ஹரிணி அமரசூரிய விளக்கம்

newsbar

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உருவம் மற்றும் குரலைப் பயன்படுத்தி போலியான முதலீட்டு விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாம் எந்தவொரு முதலீட்டாளரையும் அல்லது முதலீட்டுத் திட்டத்தையும் விளம்பரப்படுத்துவதற்கு ஒருபோதும் முன்னிற்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெளிவுபடுத்தியுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தனது உருவம் மற்றும் குரலை செயற்கையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல போலி காணொளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் வழியாகப் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தகைய காணொளிகளில் இடம்பெறும் முதலீட்டு விளம்பரங்களுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அதிக இலாபத்தை மிகக் குறுகிய காலத்தில் பெற்றுத்தருவதாகக் கூறப்படும் முதலீட்டுத் திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.

தனது உருவம் அல்லது குரல் இடம்பெற்றுள்ளதற்காக மாத்திரம் அந்த முதலீட்டு விளம்பரம் உண்மையானது என நம்பிவிடக்கூடாது என்றும், இவ்வாறான காணொளிகளைப் பார்க்கும் போதே அவை போலியானவை என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிதி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் அடிப்படை நிதி அறிவை பொதுமக்கள் வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இவ்வளவு எளிதாகவும் குறுகிய காலத்திலும் அதிக பணம் சம்பாதிக்க முடிந்திருந்தால், நாட்டில் உள்ள அனைவருமே ஏற்கனவே பணக்காரர்களாகிவிட்டிருப்பார்கள்” என அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய பணத்தை மோசடிக்காரர்களிடம் இழக்காமல், எந்தவொரு முதலீட்டிலும் ஈடுபடுவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை